கேள்வரகு தோசை சாப்பிட ஆசையா அப்ப இதை படிங்க

கேழ்வரகு மாவு – ஒரு கப்,
தோசை மாவு – அரை கப்,
பெரிய வெங்காயம் – 2,
கொத்தமல்லி – சிறிதளவு,
ப.மிளகாய் – 2,
[பாட்டி மசாலா] மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய கொத்தமல்லி, ப.மிளகாய், [பாட்டி மசாலா] மிளகு தூள்,வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து கரைத்த கேழ்வரகு மாவுடன் தோசை மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
பின்னர் தோசை மேலே கலந்து வைத்துள்ள வெங்காய கலவையை தூவி தோசையை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
அருமையான கேழ்வரகு வெங்காய தோசை ரெடி.

Leave a Reply