புதினா சூப்

என்னென்ன தேவை?

புதினா இலை – 1 கப்,
வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
புளிக்கரைசல் – 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 1/4 கப்,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
சீஸ் துருவல் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புதினா இலை, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது போட்டு வதக்கி, அரைத்த விழுது போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பின் புளிக்கரைசல் விட்டு கொதிக்க விடவும். பிறகு ேதங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். ெகாத்தமல்லித்தழை, சீஸ் துருவலைத் தூவி அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: புதினா இலையை நன்கு வதக்கியும் செய்யலாம். வதக்கி அரைத்தும் சூப்பில் சேர்க்கலாம்.

Leave a Reply