ஆரஞ்சு ரசம்

தேவையான பொருட்கள் :
1 தக்காளி
1 அ 2 பச்சை மிளகாய்
1 சிட்டிகை மஞ்சத்தூள்
2 Tsp மதராஸ் ரசப் பொடி
1 1/2 Tsp உப்பு
2 பூண்டு
1 துண்டு இஞ்சி ( விருப்பப் பட்டால் )
6 கருவேப்பிலை
1 ஆரஞ்சு பழம்

தாளிக்க :
1 Tsp கடுகு
1 Tsp சீரகம்
8 கருவேப்பிலை
1 Tsp எண்ணெய்

அலங்கரிக்க :
ஆரஞ்சு மேல் தோல் துருவியது.
கொத்தமல்லி தழை சிறிது.

செய்முறை :
ஆரஞ்சு மேல்தோலை காரட் துருவியில் இலேசாக சீவிக் கொள்ளவும்.
பிறகு பழச் சாறு பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தக்காளியை 8 துண்டுகளாக்கி போடவும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி சேர்க்கவும்.
பூண்டையும் இஞ்சியையும் நசுக்கி சேர்க்கவும்.
மஞ்சத்தூள், ரசப் பொடி மற்றும் உப்பு சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கொதிக்கும் ரசம் மேலே நுரை பொங்கி வரும் போது ஆரஞ்சு பழச் சாறை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.

கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின் சீரகத்தையும் கருவேப்பிலையும் வெடிக்க விட்டு ரசத்தின் மேல் ஊற்றவும்.
பரிமாறும் முன் துருவிய ஆரஞ்சு தோல் மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் முதலில் தக்காளி போட்டு அழுத்தி பிசைந்து பிறகு தாராளமாக ரசம் விட்டு கலக்கி பிடித்தமான துவட்டல் அல்லது கார கறியுடன் சுவைக்கவும்.

Leave a Reply