அசோகா அல்வா / Ashoka Halwa

தேவையான பொருள்கள் –
பாசிப்பருப்பு – 100 கிராம்
சீனி – 300 கிராம்
கோதுமை மாவு – 2 மேஜைக்கரண்டி
நெய் – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
அல்வா கலர் (ப்ரவுன் கலர்) – 1/4 தேக்கரண்டி

செய்முறை –
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் வறுத்த பருப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பருப்பு நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து விட்டு பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்க்கவும். வாசம் வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சீனி, கலர் பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
அல்வா பவுடர் கிடைக்காவிட்டால் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம். சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.
பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.

Leave a Reply