வெண்டைக்காய் சூப்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் – 5,
உப்பு – சிறிது,
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
அலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் – சிறிது,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – 1 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இறக்கவும். வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

Leave a Reply