பூண்டு துவையல்

என்னென்ன தேவை?

மிளகாய் வற்றல் – 15
பூண்டு – 10 கிராம்
இஞ்சி – சிறிதளவு
கடுகு, உளுந்து – ஒன்றரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்ற, மிளகாய்களை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். ஆறியதும் பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுது போல மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து தனியாக வைக்கவும். அரைத்த மிளகாய் கலவையை, தாளித்த அயிட்டங்களோடு சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்… சுள்ளென்று பூண்டு துவையல் ரெடி… டிபன், சாதம்… இப்படின்னு எந்த காம்பினேஷனுக்கும் பக்காவா செட் ஆகும்…!

Leave a Reply