ரவா கேசரி

தேவையான பொருட்கள்

ரவை – 2 கோப்பை
முந்திரி – 10
திராட்சை – 10
சர்க்கரை -1 ½ கோப்பை
ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
நெய் – 50 கிராம்.
கேசரி பவுடர் – சிறிதளவு.

செய்முறை

சிறிது நெய் விட்டு ரவையை வறுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் 5 கோப்பை தண்ணீர் விட்டு அதில் சிறிது கேசரி பவுடரை சேர்த்து கொதித்ததும் வறுத்த ரவையை கொட்டி கிளறவும். ரவை வெந்ததும் சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, 2 ஸ்பூன் நெய் விரும்பினால் உப்பையும் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

Leave a Reply