பைனாப்பிள் ரைஸ்

என்னென்ன தேவை?

அன்னாசிப்பழம் – 1
பல்லாரி – 1 (நறுக்கியது)
இஞ்சி விழுது – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
எலுமிச்சை ஜூஸ் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகள், இஞ்சி விழுதை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி தழைகளை கிள்ளிப்போட்டு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். இத்துடன் சிறிதளவு தண்ணீரிட்டு மூடி வைத்து, 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் மூடியை திறந்து நீர் வற்றும் வரை வதக்கவும். இப்போது சாதம், மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறவும். இத்துடன் எலுமிச்சை ஜூைச சேருங்க… சூடு ஆறியதும் சாப்பிட்டு பாருங்க.. சூப்பராய் இருக்கும்.

Leave a Reply