ஸ்பெஷல் தயிர் வடை

என்னென்ன தேவை?

முழு உளுத்தம்பருப்பு – 2 கப்,
பச்சை மிளகாய், உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

பூரணத்திற்கு…

பொடித்த முந்திரி – 10,
பாதாம் சீவல் – சிறிது.

இனிப்பு புளிப்பு சட்னி…

புளிப்பில்லாத கெட்டி தயிர் – 2 கப்,
கொத்தமல்லித் தழை, புதினா, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைத்தது – தேவைக்கு,
சர்க்கரை – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வெண்ணெய் பந்து போல் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வடை மாவின் உள்ளே கலந்த நட்ஸ் பூரணக் கலவையை வைத்து வடைகளாக பொரித்தெடுத்துக் கொள்ளவும். சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து பிழிந்து தட்டில் அடுக்கவும். தயிரை கடைந்து மல்லித் தழை, புதினா, பச்சைமிளகாய், சர்க்கரை, உப்பு தேவைக்கு சேர்த்து கலந்து வடையின் மேல் ஊற்றி பரப்பி, அதன் மீது சட்னிகளை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். மேலே ஓமப்பொடி, கொத்தமல்லித்தழையை தூவியும் பரிமாறலாம்.

Leave a Reply