இளநீர் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு – ஒரு கிலோ
இளநீர் – ஒன்று அல்லது இரண்டு

எப்படிச் செய்வது?

இட்லிக்கு மாவு அரைக்கும்போது இளநீரைச் சேர்த்துக் கலக்கி அரைத்து வைத்துவிட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும். இளநீர் இட்லி தயார்!!!

இட்லி மாவு அரைக்க சில டிப்ஸ்கள்:

இட்லி மாவு அரைக்க, அரிசி ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி வரை நேரம் ஊறினால் போதும். அரைக்கும் போது, தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அரைக்க வேண்டும். மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போதுதான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.

இட்லி ஊற்றுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு உளுந்தை அரைத்து, அரிசி மாவுடன் கலந்து இட்லி சுட்டாலே போதும். உளுந்தை ஊற வைக்கும்போதே, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கலாம். அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்துவிடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில்தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால்தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.

Leave a Reply