கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

கஸ்டார்ட் ஆப்பிள் – 8 முதல் 10
மேரி பிஸ்கட் – 7 முதல் 8
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்

எப்படி செய்வது?

நல்ல பழுத்த கஸ்டார்ட் ஆப்பிள் எடுத்து இரண்டாக வெட்டி விதைகளை நீக்கவும். சதையை கரண்டியால் நீக்கி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, மேரி பிஸ்கட், பால் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கன்டெய்னரில் அதை ஊற்றி பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு நன்றாக மசித்து கன்டெய்னரில் ஊற்றி மேலும் 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்

Leave a Reply