சத்தான அரிசிக்கஞ்சி செய்வது எப்படி?

உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடலுக்கு தொம்பு தரக்கூடியது இந்த அரிசிக்கஞ்சி. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

சத்தான அரிசிக்கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 200 கிராம்
சுக்குப்பொடி – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை போட்டு லேசாக வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

* இந்த ரவையை குக்கரில் போட்டு நன்கு டம்ளர் தண்ணீர் விட்டு 5 விசில் வரும் வரை குழைய வேகவிடவும்.

* பின்னர் அதில் உப்பு, சுக்குப் பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சத்தான அரிசிக்கஞ்சி ரெடி.

Leave a Reply