வாழைப்பழ கேக்

என்னென்ன தேவை?

மைதா – 200 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
பெரிய சைஸ் முட்டை – 2,
வெண்ணெய் – 100 கிராம்,
உப்பு – 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
பழுத்த வாழைப்பழம் – 250 கிராம் (மசிக்கவும்).

எப்படிச் செய்வது?

வெண்ணெய், சர்க்கரையை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இத்துடன் முட்டை, வாழைப்பழத்தைச் சேர்த்து அடிக்கவும். பின் இதில் மைதா, உப்பு, சோடா உப்பு, எசென்ஸ் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு மெதுவாக கலந்து, பிரெட் டின்னில் ஊற்றி 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 30-35 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

Leave a Reply