பேபிகார்ன் சூப்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய பேபிகார்ன் – 4,
வெங்காயம் – 1,
இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 1/2 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு,
வெண்ணெய் – 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குக்கரில் பேபிகார்ன், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த பேபிகார்ன், உப்பு, சிறிது பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து ஊற்றவும். நன்றாக கொதித்ததும் இறக்கி மிளகுத்தூள் தூவி பரிமாறவும். குறிப்பு: கார்ன்ஃப்ளாருக்கு பதில் பால் 1½ கப் சேர்க்கலாம்.

Leave a Reply