ஜவ்வரிசி லட்டு

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1 கப்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
பாதாம் – 10-15,
முந்திரி – 5-6,
பொடித்த சர்க்கரை – 1 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும், மிதமான தணலில் பாதாம், முந்திரி, ஜவ்வரிசியை ஒவ்வொன்றாக தனித்தனியே வறுத்து ஆற விடவும். பின்பு அனைத்தையும் மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை, சர்க்கரைத்தூள், மீதியுள்ள நெய்யை விட்டு நன்கு கலந்து, சிறு சிறு லட்டுகளாக பிடித்து, பாதாம், காய்ந்த திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் இந்த லட்டு.

Leave a Reply