கொள்ளு சூப்

என்னென்ன தேவை?

கொள்ளு – 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 5-6,
புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
தனியா – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது.

எப்படிச் செய்வது?

அடுப்பில் வெறும் கடாயில் கொள்ளு போட்டு பட பட என பொரியும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு பொரியும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். ஆறியதும் கொள்ளு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, புளிக்கரைசல், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். சூடாக கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Leave a Reply