ஓமம் கற்பூரவல்லி இலை சூப்

என்னென்ன தேவை?

கற்பூரவல்லி இலை – 10,
ஓமம் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை -4,
நெய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

Leave a Reply