மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி – கோஸ் மசாலா வடை

மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடாக சாப்பிட பட்டாணி மசாலா வடை சூப்பராக இருக்கும். இதை செய்வதும் மிகவும் சுலபம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி – கோஸ் மசாலா வடை
தேவையான பொருட்கள் :

காய்ந்த பட்டாணிப் பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – அரை கப்
சோம்பு – அரை டேபிள்ஸ்பூன்
கோஸ் – அரை கப்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :

* இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, மீதியுள்ள சோம்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* அடி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிதமான தீயில் வைத்து வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான பட்டாணி – கோஸ் மசாலா வடை ரெடி.

* சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply