ஸ்நாக்ஸ் அவல் – உருளைக்கிழங்கு கட்லெட்

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அவல் உருளைக்கிழங்கை சேர்த்து கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் – உருளைக்கிழங்கு கட்லெட்
தேவையான பொருட்கள் :

அவல் – ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 2,
பச்சை பட்டாணி – சிறிதளவு
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

* பச்சை பட்டாணி வேக வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நநறுக்கி வைக்கவும்.

* 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும்.

* ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அவல், மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கட்லெட்டுகளை கரைத்த சோளமாவில் தோய்த்து, அவலில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

* சூப்பரான அவல் – உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

Leave a Reply