சத்தான சுவையான குதிரைவாலி மிளகு கிச்சடி

சிறுதானியங்களை பயன்படுத்தி காலை உணவு செய்து சாப்பிடுவது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியை வைத்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான குதிரைவாலி மிளகு கிச்சடி
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி குருணை – 2 கப்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 50 கிராம்
நெய் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பயித்தம்பருப்பு – 1 கப்

செய்முறை :

* ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குதிரைவாலி அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

* பயித்தம்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரி போட்டு வறுக்க வேண்டும்.

* அடுத்து இஞ்சி, பமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். ( 1 கப் குதிரைவாலி அரிசிக்கு 3 கப் வீதம் தண்ணீர் விடவேண்டும்.)

* கொதிவந்ததும் குதிரைவாலி அரிசி, உப்பு, பயித்தம் பருப்பை போட்டு கிளறவும்.

* வெந்து இறக்கும் பதம் வரும் போது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி பரிமாறவும்.

* பொங்கல் சுவையில் இருக்கும் குதிரைவாலி மிளகு கிச்சடி அனைவருக்கும் பிடிக்கும்.

Leave a Reply