பஞ்சாமிர்தம்

என்னென்ன தேவை?

மலைவாழைப்பழம் – 8
கரும்புச்சர்க்கரை – 1 கிலோ
நெய் – 50 கிராம்
பேரீட்சை – 150 கிராம்
கற்கண்டு – 150 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்

எப்படிச் செய்வது?

மலை வாழைப்பழத்தின் தோலை உரித்து நன்கு பிசைய வேண்டும். கரும்புச்சர்க்கரையை போட்டு கெட்டி இல்லாமல் நன்றாக கரைக்க வேண்டும். நெய்யை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். விதை நீக்கிய பேரீட்சை, கற்கண்டு போன்றவற்றையிட்டு நன்றாக கலக்க வேண்டும். கடைசியாக ஏலக்காய் கலக்க வேண்டும். இதை துண்டு போட்டு மூடி வைத்து ஒருநாள் கழித்து சாப்பிட்டால் சுவையான பஞ்சாமிர்தம் ரெடி…!

Leave a Reply