புரோக்கோலி வடை

தேவையானவை: சிறு துண்டுகளாக உதிர்த்த புரோக்கோலி – ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை – அரை கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா கால் கப், துருவிய கேரட் – அரை கப், பூண்டுப்பல் – 4, இஞ்சி (தோல் சீவியது) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் புரோக்கோலியை 3 நிமிடங்கள் போட்டு நீரை வடிகட்டி எடுக்கவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டிய கொண்டைக்கடலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையுடன் புரோக்கோலி, கேரட், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பருப்புக் கலவையைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

புரோக்கோலி இதயத்துக்குப் பலம் கொடுக்கும்.

Leave a Reply