சிவப்பு அரிசி அரவணை பாயசம்

என்னென்ன தேவை?

சிவப்பு அரிசி – 1 கப் (கரகரப்பாக பொடிக்கவும்),
நெய் – 1/2 கப், நல்ல சிவப்பு வெல்லம் – 2 கப் (பொடிக்கவும்),
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
முந்திரி – 1/2 கப்,
திராட்சை – 1/2 கப்,
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை,
தேங்காய் (பல் பல்லாக நறுக்கியது) – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர், வெல்லத்தை சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சி வடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 ேடபிள்ஸ்பூன் நெய் விட்டு, சிவப்பு அரிசியை வறுத்து, அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறி வேக விடவும். முக்கால் பாகத்திற்கு வெந்ததும், வெல்லப் பாகை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.

இத்துடன் மீதியுள்ள நெய்யையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நெய், வெல்லப் பாகுடன் சேர்த்து நல்ல சிவப்பு கலரில் வரும்பொழுது, நெய்யில் வறுத்த தேங்காய்ப்பல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து நன்கு கலந்து, சிறிது நெய் சேர்த்து இறக்கி படைத்து பரிமாறவும்.

குறிப்பு: பாயசத்தை குழைய வேகவிடக் கூடாது. அரிசியை ரவையாக உடைக்காமல் செய்யலாம். சிவப்பு அரிசிக்கு பதில் பச்சரிசி, கற்கண்டு கொண்டும் செய்யலாம்.

Leave a Reply