ரவா முறுக்கு

என்னென்ன தேவை?

அரிசி மாவு – 1/2 கப்
ரவை – 1/4 கப்
வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கருப்பு எள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ரவையை முதலில் ஜாரில் போட்டு மசித்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது ரவையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விட்டு அடுப்பை அணைக்கவும். ரவையை நன்கு கிளறி ஆறவிடவும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, வேக வைத்த ரவை, வெண்ணெய், மிளகாய் தூள், எள், உப்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். முறுக்கு அச்சு எடுத்து அதில் மாவை நிரப்பி காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

Leave a Reply