கேரமல் கஸ்டர்ட்

என்னென்ன தேவை?

கிண்ணங்கள் – 8,
மஞ்சள் கரு – (4 முட்டைகளில் இருந்து எடுத்தது),
சர்க்கரை – 2 கப், பால் – 2 கப்.

கேரமல் செய்ய…

பொடிக்காத சர்க்கரை – 2 கப்,
பேக் செய்ய பீங்கான் அல்லது அலுமினிய கப் – 8.

எப்படிச் செய்வது?

முதலில் கிண்ணங்களை ரெடி செய்யவும். அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து அதில் 2 கப் பொடிக்காத சர்க்கரை போட்டு கைவிடாமல் கிளறவும். முதலில் கட்டி கட்டியாக வரும். கவலைப்பட வேண்டாம். சிறிது நேரத்தில் இளகி, தேன் நிறமாக மாறி ஒரு பாகு கிடைக்கும். இதை கிண்ணங்களில் (சூடாயிருக்கும்போதே) ஊற்றி, நான்கு பக்கங்களிலும் சுழற்றிவிட்டால் கிண்ணங்களின் அடிப்பகுதி மற்றும் பக்கங்களில் நன்றாக ஒட்டிக் ெகாள்ளும்.

கஸ்டர்ட் செய்ய…

முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை இவை இரண்டையும் நன்றாக நுரைக்க அடிக்கவும். பின் பால் சேர்த்து அடித்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற கடாயில் தண்ணீர் கொதிக்க, வைத்து, அடித்த சர்க்கரை, முட்டைக் கலவையை அதனுள் வைத்துக் கைவிடாமல் கலக்கவும். மரக்கரண்டியால் கிளறவும். கெட்டியானபின் மரக்கரண்டியின் மேல் ஒட்டிக் கொள்ளும்.

அந்த நிலையில் வெந்நீரிலிருந்து வெளியில் எடுத்து தயாராக வைத்துள்ள கேரமல் கிண்ணங்களினுள் விட்டு, ஆவியில் வேக விடவும். ஒவ்வொரு கிண்ணத்தையும் அலுமினிய ஃபாயில் போட்டு மூடிப் பிறகு வேக வைக்கவும். இட்லிப் பானையில் கூட வைக்கலாம். சுமார் 45 நிமிடம் கழித்து, வெளியில் எடுத்து, ஆறியவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து, சில்லென்று பரிமாறவும். 4, 5 நாட்கள் வரைகூட கெடாமல் இருக்கும்.

Leave a Reply