காளான் பிரியாணி

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 1 கப்
காளான் – 3/4 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
தடித்த தயிர் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் -1
பட்டை – 1/4 அங்குல துண்டு
பிரியாணி இலை -1
இஞ்சி பூண்டு விழுது – 2.5 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1.5 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – சிறிது

அரைக்க…

கொத்தமல்லி இலை – 4 தேக்கரண்டி
புதினா இலை – 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி


எப்படிச் செய்வது?

ஜாரில் அரைக்க தேவையான பொருட்களை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக மசித்து வைக்கவும். ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடான பின் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி கூழ் (2 தக்காளியை வேக விட்டு பின் ஜாரில் போட்டு நைசாக மசிக்கவும்), அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி, புதினா கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். இப்போது கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து காளானை போட்டு 2 நிமிடங்கள் வதக்கி தயிர் சேர்க்கவும். பின்னர் பாசுமதி அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். 3 விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும். வெங்காயம் பச்சடி கொண்டு சூடாக பரிமாறவும்.

Leave a Reply