சிறு பருப்பு பாயசம்

என்னென்ன தேவை?

கோதுமை உடைத்தது – 1 கப்,
பாசிப் பருப்பு – 1 கப்,
கடலைப் பருப்பு – 1 கப்,
வெல்லம் – 750 கிராம்,
நெய் – சிறிதளவு,
முதல் தேங்காய்ப்பால் – 2 கப்,
முந்திரி – 1 சின்ன கப்.


எப்படிச் செய்வது?

கோதுமையை முதலில் நன்கு கழுவி, குக்கரில் ஒரு விசில் வேகவிடவும். பாசிப் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை கடாயில் தனித் தனியாக எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ளவும். பிறகு ஒன்றாக குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும். இதனுடன் வேகவைத்த கோதுமையை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேங்காய்ப் பால் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்க்கவும்.

Leave a Reply