கேக் லாலிபாப்

என்னென்ன தேவை?

மீதமான கேக் துண்டுகள் – 100 கிராம்,
குக்கிங் சாக்லெட் (கறுப்பு அல்லது வெள்ளை) – 50 கிராம்,
வெண்ணெய் – 25 கிராம்,
கன்டென்ஸ்டு மில்க் – தேவைக்கு,
பட்டர் பேப்பர் – 1,
டூத் பிக்ஸ் – 10.

அலங்கரிக்க…

சாக்லெட் ஸ்பிரிங்கிள்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கேக் துண்டுகளை மிக்சியில் பொடிக்கவும். இதில் தேவையான அளவு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக லாலிபாப் சைஸில் பிடித்து, அதில் பல் குத்தும் குச்சியை செருகி, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்கவும். சாக்ெலட், வெண்ணெயை சேர்த்து ஆவியில் உருக்கவும். ஃப்ரிட்ஜில் இருந்து உருண்டைகளை எடுத்து, உருக்கிய சாக்லெட்டில் முக்கி எடுத்து, அதன் மீது சாக்லெட் ஸ்பிரிங்கிள்ஸ் தூவி, பட்டர் பேப்பர் மேல் வைத்து, ஃப்ரீசரில் 30 நிமிடம் வைக்கவும். பிறந்தநாள் விழாக்களுக்கு ஒரு கலர்ஃபுல் ஐட்டம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

Leave a Reply