பொடி இட்லி

என்னென்ன தேவை?

இட்லி – 5
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
இட்லி மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

முதலில் இட்லியை சிறிது துண்டாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், இட்லி மிளகாய் பொடி சேர்த்து வதக்கி இட்லியை சேர்த்து கலந்து டாஸ் செய்து சூடாக பரிமாறவும்.

Leave a Reply