ஒயிட் ஃபாரஸ்ட் கேக்

என்னென்ன தேவை?

வெனிலா ஸ்பான்ஞ் கேக் – 1 ரவுண்டு,
தேன் சிரப் (தேன் – 100 மி.லி, தண்ணீர் 150 மி.லி. இரண்டையும் 10 நிமிடம் கொதிக்க விடவும்).

அலங்கரிக்க…

விப்பிங் கிரீம் – 300 மி.லி,
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
குக்கிங் சாக்லெட் துருவியது – 150 கிராம்,
செர்ரி – 50 கிராம்.

எப்படிச் செய்வது?

ஸ்பான்ஞ் கேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, கூர்மையான கத்தி கொண்டு மூன்று லேயர்களாக வெட்டிக் கொள்ளவும். பின் ஆறிய தேன் சிரப்பை ஒரு கேக் லேயர் மீது மெதுவாக தெளிக்கவும். பின் அதன் மேல் 1 டீஸ்பூன் விப்பிங் கிரீம் போட்டு சர்க்கரை எசென்ஸ் சேர்த்து நன்கு தடவவும். பின் அதன்மேல் சிறிது துருவிய சாக்லெட்டை போடவும்.

அதேபோல் மற்றொரு லேயர் கேக்கை அதன்மேல் வைத்து தேன் சிரப் ஊற்றி, கிரீம் தடவி, சாக்லெட் தூவி, அதன்மேல் கடைசி கேக்கை வைத்து தேன் ஊற்றி, விப்பிங் கிரீமை தடவி, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து மற்றொரு லேயர் விப்பிங் கிரீமை முழுவதுமாக தடவி, சுற்றிலும் சாக்லெட் துருவலைப் போட்டு செர்ரியை கொண்டு அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பிறகு பரிமாறவும்.

Leave a Reply