குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் மினி பூரி

பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பூரியில் பீட்ரூட் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பீட்ரூட் மினி பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் மினி பூரி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன்,
பீட்ரூட் துருவல் – 2
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

* பச்சை பட்டாணியை மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், ஓமம், பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

* சூப்பரான சத்தான பீட்ரூட் மினி பூரி ரெடி.

* பச்சைப் பட்டாணி, கொத்தமல்லித்தழை, பீட்ரூட் சேர்வதால் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும்.

Leave a Reply