நெய் பருப்பு

தேவையான பொருட்கள்

 • பாசிப்பருப்பு    –  1 கப்
 • மஞ்சள்தூள்  –  1 / 4  தேக்கரண்டி
 • கடுகு  –  1   தேக்கரண்டி
 • சீரகம்  –  1   தேக்கரண்டி
 • பூண்டு  –  4  பல்
 • பச்சைமிளகாய்  –  2
 • வெங்காயம்  –  1  மேசைகரண்டி
 • நெய்   – 1 1 /2 தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 1. குக்கரில் பருப்பு, மஞ்சள்தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்து விடவும்.
 2. கடாயில் நெய் விட்டு  கடுகு, சீரகம், கருவேப்பில்லை, பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு, பூண்டு  தாளித்துக் கொட்டவும்.
 3. சாதத்துடன் சாப்பிடும்போது சிறிது நெய் சேர்த்து சாபிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply