சிறுபருப்பு பாயசம்

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு – 200 கிராம்,
வெல்லம் – 400 கிராம்,
சுக்குப் பொடி – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
தேங்காய்த் துருவல் – ஒரு பெரிய முழுதேங்காய்,
தேங்காய் (பல் பல்லாக நறுக்கி வறுத்தது) – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துருவலை அரைத்து, கெட்டியான முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சி வடித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை கழுவி, சுத்தம் செய்து ஒரு துணியின் மேல் உலர்த்தவும். வாயகன்ற பாத்திரத்தில் 1½ டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், உலர்ந்த பாசிப்பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

பின்பு இரண்டாம் பாலை சேர்த்து கிளறி வேக விடவும். நன்றாக வெந்ததும் வெல்லப்பாகை சேர்த்து கைவிடாமல் கிளறி, கெட்டியாக வரும்போது முதல் பாலைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, மீதியுள்ள நெய், தேங்காய்ப்பல், முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து படைத்து பரிமாறவும்.

Leave a Reply