பால் பாயசம்

என்னென்ன தேவை?

பசும்பால் அல்லது பாக்கெட் பால் – 2 லிட்டர்,
சிவந்த அரிசி/கேரள பச்சரிசி – 125 கிராம்,
முந்திரி, திராட்சை,நெய் – தேவைக்கு,
ஏலக்காய் – 6,
வெல்லம் – 400 கிராம்.

எப்படிச் செய்வது?

வெல்லத்தை தண்ணீர் சேர்த்து, கெட்டியான பாகாக காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வாயகன்ற உருளி அல்லது பாத்திரத்தில் பால் ஊற்றி, இத்துடன் அரிசியை சேர்த்து வேகவிடவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இது நன்கு வெந்து, பால் சிவந்து வரும்போது, வெல்லப்பாகை சேர்த்து கைவிடாமல் கிளறவும். சிறிது கெட்டியானதும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து படைத்து பரிமாறவும்.

Leave a Reply