சத்தான டிபன் குதிரைவாலி தக்காளி தோசை

சிறுதானியங்களில் ஒன்றாக குதிரைவாலி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று குதிரைவாலி, தக்காளியை வைத்து தோசை செய்து எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான டிபன் குதிரைவாலி தக்காளி தோசை
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – 4 கப்,
உளுந்து – ஒரு கப்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
தக்காளி – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
வெங்காயம் – ஒன்று,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

*குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.

* மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.

* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.

* சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

* தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply