செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் அவற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அவற்றை வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து சிறிது உப்பு, பெருஞ்சீரகம் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக டாஸ் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கப்பட்ட பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் நன்றாக ரோஸ்ட் செய்யவும். செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!

Leave a Reply