கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் – 500 கிராம்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
புளி – எலுமிச்சம் பழ அளவு,
மிளகாய்தூள் – 50 கிராம்,
வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க :

வெந்தயம் – அரை டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

* கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து கலக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

* மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

* பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.

* கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால். கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

Leave a Reply