ரவை பாயாசம்

என்னென்ன தேவை?

ரவை – 100 கிராம்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யில் ரவை சேர்த்து வறுக்கவும். பின் பால், ஏலக்காய் சேர்த்து நன்றாக சமைக்கவும். வெந்த பின் அவை கெட்டியாகும் அதனால் தேவையான அளவு பால் சேர்க்கவும். இப்போது சர்க்கரை சேர்த்து கலந்து கன்டென்ஸ்ட் மில்க் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Leave a Reply