உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

தினமும் உணவில் சாலட் சேர்த்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சாலட் செய்துவது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்
தேவையான பொருட்கள் :

கேரட் – 2
முட்டைகோஸ் – 50 கிராம்,
தக்காளி – 1
வெள்ளரிக்காய் – 1
குடமிளகாய் – 1,
எலுமிச்சைப் பழம் – ஒன்று,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – அரை ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை :

* பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும்.

* வெள்ளரிக்காய், கேரட், முட்டைகோஸை துருவி கொள்ளவும்.

* தக்காளியின் விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடமிளகாயை மெலிதாக வெட்டி கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும்.

* துருவிய வெள்ளரிக்காய், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

* பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

* வெஜிடபிள் சாலட் ரெடி.

Leave a Reply