பூரி

பரிமாறும் அளவு – 3 நபருக்கு

தேவையான பொருள்கள் –
கோதுமை மாவு – 300 கிராம்
ரவை – 1 தேக்கரண்டி
வெந்நீர் – தேவையானஅளவு
சூடான பால் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிபதற்கு தேவையான அளவு

செய்முறை –

ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை மற்றும் 50 மில்லி பாலை ஊற்றி பிசையவும். பிறகு தேவையான அளவு வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும் .

அரை மணி நேரம் கழித்து மாவை மீண்டும் ஒரு தடவை பிசைந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக் கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விட வேண்டும்.
குறிப்புகள் –
எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் முன் பூரியைப் போட்டால் உப்பி வராது.
மாவை பிசைந்து அதிக நேரம் வைத்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சி விடும்.

Leave a Reply