ரவா மசாலா இட்லி

ரவை 1 கப்

ரவா மசாலா இட்லி
தயிர்[கொழுப்பில்லாதது] – 2 கப்
ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன்.
ஆப்ப சோடா மாவு – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது.
சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் – 2 அல்லது 3.
மிளகு – 1/4 ஸ்பூன்.
சீரகம் – 1/4 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1. வானலியில், 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தாளித்து, அத்துடன் ரவையும் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
2. இத்துடன் உப்பு, தயிர் மற்றும் ஃப்ரூட் சால்ட்,சோடா மாவு, சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
3. இட்லி பாத்திரத்தில் , தட்டு வைத்து, சிறிய இட்லியாக ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் இல்லாமல், கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியோ அல்லது சாம்பாரோ நல்ல மேட்ச்.

Leave a Reply