பஞ்சரத்ன தட்டை

என்னென்ன தேவை?

அரிசி மாவு ஒன்றரை கப்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

வெண்ணெய் ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேகவையுங்கள். அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். அதனுடன் வேகவைத்த பருப்பு வகைகளை மசித்துச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையுங்கள்.

பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். உருண்டையை எண்ணெய் தடவிய வாழையிலையில் வைத்து வட்டமாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்

Leave a Reply