பூண்டு முறுக்கு

என்னென்ன தேவை?

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 8
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் காய்ந்த மிளகாய், பூண்டு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்றாக மசிக்கவும். இப்போது ஒரு கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதனுடன் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், எள், உப்பு சேர்த்து கலக்கவும். பின் வெண்ணெய் சேர்த்து பிசைந்து அரைத்த பூண்டு மிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் மாவில் ஊற்றி பிசறவும். இப்போது உங்களுக்கு பிடித்த அச்சையை எடுத்து அதில் மாவை வைத்து பிழிந்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொறிக்கவும்.

Leave a Reply