மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

உளுந்து வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த மத்தூர் வடை மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிமையானது. இப்போது இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை
தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்,
அரிசி மாவு – 1 கப்,
மைதா மாவு – 2 ஸ்பூன்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பிலை – சிறிது,
கொத்தமல்லி தழை – சிறு கட்டு,
உப்பு – தேவையானது,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சூடான எண்ணெய் 2 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து, மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை ரெடி.

* தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.

Leave a Reply