தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையால் தான் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஒருவரின் உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், இதய பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் என பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாக வந்துவிடும்.

இந்த பிரச்சனைகளெல்லாம் வராமல் இருக்க இயற்கை வைத்தியங்களில் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஞ்சி சாற்றின் தேன் கலந்து குடிப்பது. அனைவருக்கும் இஞ்சி மற்றும் தேனின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க இவை பெரிதும் உதவியாக உள்ளன.

இத்தகைய இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செரிமான பிரச்சனைகள் தற்போது கண்ட ஜங்க் உணவுகளை உட்கொண்டு, செரிமான மண்டலத்தினால் சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

ஆஸ்துமா ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக நுரையீரலினுள் செல்லும் இரத்த நாளங்கள் நன்கு ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, சுவாச பிரச்சனைகள் நீங்கும்.

புற்றுநோய் தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

கொழுப்புக்களை கரைக்கும் இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

குறிப்பு முக்கியமாக இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடிக்கும் முன்பு, மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளவும்.

Leave a Reply