முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
இஞ்சி – பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்
கேரட் – 1
வெண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

* முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

* வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.

* சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.

Leave a Reply