குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட்டுடன் உலர்ந்த பழங்களை சேர்த்து சத்தான சுவையான சாக்லேட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்
தேவையான பொருட்கள் :

பொடித்த டார்க் சாக்லேட் – 1 1/2 கப்
வெண்ணெய் – அரை கப்
சர்க்கரை – சிறிது
பாதாம், வால்நட், முந்திரி, பேரீச்சம்பழம், காய்ந்த பேரீச்சம், காய்ந்த திராட்சை, அத்திப்பழம்(முழுநட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்) – தேவைக்கு
பட்டர் பேப்பர், கலர் பேப்பர், சாக்லேட் பேப்பர் – தேவைக்கு

செய்முறை :

* நட்ஸ், உலர்பழங்களை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லேட் துண்டுகள், வெண்ணெய், சர்க்கரை சேர்த்து அடிப்பாத்திரத்தை அடுப்பில் மேல் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இது கரைந்து கெட்டியான வரும் போது இறக்கவும்.

* சூடாக இருக்கும் போது நட்ஸ், உலர்ந்த பழங்கள் அனைத்தையும் அதில் போட்டு நன்றாக கலந்து பட்டர் பேப்பரில் மேல் பரப்பி வைக்கவும்.

* பின்னர் இதை தனித்தனியா டிரேயில் வைத்து பிரிட்ஜில் 5 மணிநேரம் குளிர வைக்கவும்.

* நன்றாக செட் ஆனவுடன் எடுத்து துண்டுகள் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

* நட்ஸ் சாக்லேட் ரெடி.

Leave a Reply