சோயா - தேங்காய் - அவல் பாயசம்

என்னென்ன தேவை?

சோயா தானியம் – 1/4 கப்,
தேங்காய் (துருவியது) – 1/4 கப்,
அவல் – 3 டீஸ்பூன்,
சர்க்கரை – 6 டீஸ்பூன்,
நெய் – 1/2 டீஸ்பூன்,
முந்திரி – 4,
திராட்சை – 4,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சோயாவை நன்கு ஊற வைக்கவும். 3 மணி நேரம் கழித்து சோயாவை அரைத்து, பால் எடுக்கவும். தேங்காயையும் துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து வைக்கவும். ஒரு கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் அவலையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலில் அவலை சேர்த்து வேக வைத்து, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு வெந்தவுடன் முந்திரி, திராட்சையினால் அலங்கரித்து பரிமாறவும்.

Leave a Reply