மோர் குழம்பு

தேவையான பொருட்கள்

மிக எளிதில் தயார் செய்யக் கூடியதும், உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதுமானதே மோர் குழம்பு.

இவையெல்லாம் தேவை

மோர் – ஒரு லிட்டர்
செளசெள காய் – 1
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுத்தபருப்பு – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை- சிறிதளவு
சீரகம் – அரை ஸ்பூன்
சமையல் எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

இப்படி செய்யவும்

செளசெள காயை பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவைக்கவும். பாதியளவு வெந்தபிறகு அரைத்த பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.

காய் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். பின்னர் மோரை அதில் கலந்து கறிவேப்பிலை, கடுகு உளுந்தபருப்பு தாளித்து கொட்டவும்.

Leave a Reply