தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாளின் அளவு குறையுமாம்!

பொதுவாக இந்திய சமையல்களில் தக்காளி இல்லாமல் எதுவுமே இருக்காது. மேலும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், உணவில் தக்காளி சேர்ப்பது நல்லது. மேலும் தக்காளியானது புற்றுநோய், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவற்றை தடுப்பதோடு, இரத்தத்தை சுத்தப்படுத்தும், டாக்ஸின்களை வெளியேற்றும், பார்வையை மேம்படுத்தும்.

ஆனால் அத்தகைய தக்காளியை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், வாழ்நாளில் 50 சதவீதம் குறையும் என்பது தெரியுமா? இதற்கு காரணம் அதில் உள்ள ஆசிட் தான். எந்த ஒரு உணவுப் பொருளிலும் நல்லது இருப்பது போன்றே, கெட்டதும் நிறைந்துள்ளது. அதிலும் இதில் உள்ள ஆசிட்டானது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளையும் தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சந்திக்க நேரிடும். இங்கு தக்காளியை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இலைகள்
தக்காளியின் இலைகளை எக்காரணம் கொண்டும் உணவில் சேர்க்கக்கூடாது. தக்காளியின் இலைகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமில எதிர்வினை
தக்காளியில் உள்ள அதிகப்படியான அமிலத்தினால், இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சல் அல்லது இரையக உணவுக்குழாய் நோய்க்கு உள்ளாகக்கூடும்.

வயிற்று பிரச்சனைகள்
சிலருக்கு தக்காளியினால் அழற்சி ஏற்பட்டு, சிறு அளவில் தக்காளியை உணவில் சேர்த்தாலும், செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் வாய்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

தக்காளி சாஸ்

சிலருக்கு தக்காளி சாஸ் என்றால் கொள்ளை பிரியம். இதனால் அவற்றை அனைத்து உணவுகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த தக்காளி சாஸில் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, இரைப்பையினுள் உள்ள படலத்தில் இடையூறு ஏற்பட்டு, அதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நோயெதிர்ப்பு சக்தி குறையும்

பச்சை தக்காளியில் கரோட்டின் வகையின நிறப்பொருளான லைகோபைன் உள்ளது. எனவே தக்காளியை பச்சையாக அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்தால், அது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுவதோடு, உடலின் வலிமையைக் குறைத்துவிடும்.

தக்காளி விதை
தக்காளியினுள் உள்ள விதைகளை அதிகமாக சாப்படுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இந்த விதைகளெல்லாம் எளிதில் செரிமானமாகாமல் இருப்பதோடு, அவை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.

Leave a Reply